×

நடிகர்கள் தயாரிப்பாளர் சங்க பிரச்னை அமைச்சர் பேட்டி

கோவில்பட்டி: தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேற்று அளித்த பேட்டி: நடிகர் சங்க தேர்தல் நடைபெற்றபோது நீதிமன்றம் சென்றதுபோல், தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்தவர்களும் நீதிமன்றம் சென்றுள்ளனர். நடிகர் சங்கமாக இருந்தாலும், தயாரிப்பாளர் சங்கத்தினராக இருந்தாலும் ஒருங்கிணைந்து பேசி பிரச்னைகளை சுமூகமாக முடிக்க தயாராக இருந்தால் அரசு முழு ஒத்துழைப்பு அளிக்கும். தேவை ஏற்பட்டால் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு காண அரசு வழிவகுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister of Actors Producers Association Issue , Actors, Producers Association Issue, Minister Interview
× RELATED அடுத்த முதல்வர் எடப்பாடிதான்: அமைச்சர் கருப்பணன் பேட்டி