×

வாசுதேவநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏவுக்கு கொரோனா தொற்று

சிவகிரி: தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதி எம்எல்ஏ மனோகரன். இவர், அதிமுக எம்ஜிஆர் இளைஞரணி மாநில இணை செயலாளராகவும் உள்ளார். நெல்லையில் முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் மனோகரன் எம்எல்ஏ கலந்து கொள்ளவிருந்தார். இதற்காக அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து மனோகரன் எம்எல்ஏ, தென்காசி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

Tags : constituency ,AIADMK MLA ,Corona ,Vasudevanallur , Vasudevanallur constituency, AIADMK MLA, Corona
× RELATED கிருஷ்ணகிரி தொகுதி காங்கிரஸ் எம்பி செல்லகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி