மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை புரிபவர்கள் தேசிய விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

சென்னை: மாற்றுத்திறனாளிகள் துறை நல ஆணையர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக தேசிய அளவில் சிறப்பாக சேவை புரிபவர்கள் மற்றும் நிறுவனங்கள் தேர்வுக்குழு மூலம் தேர்வு செய்யப்பட்டு, மத்திய அரசின், சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கும் (மாற்றுத் திறனாளிகள் நலன்) அமைச்சகத்தால், கவுரவிக்கப்பட உள்ளனர். இதற்காக தொண்டு நிறு வனங்கள், தனிநபர், மாற்றுத்திறனுடைய பணியாளர்களுக்கு தேசிய விருது 3.12.20 அன்று புதுடெல்லியில் வழங்கப்படும். அதன்படி, மாற்றுத் திறனாளிகளில் சிறப்பாக பணிபுரிபவர்கள், சுயதொழில் புரிபவர்கள், சிறந்த பணியமர்த்தப்படும் அலுவலர் / நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கென சிறப்பாக சேவை புரிந்த தனிநபர் / நிறுவனம், மாற்றுத் திறனாளிகளில் முன்னோடியாக திகழ்பவர்கள், வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையிலான சிறந்த செயல்முறை ஆராய்ச்சி பணி/தொழில் நுட்பம் அல்லது கண்டுபிடிப்புகள், தடையற்ற சூழ்நிலையை ஏற்படுத்திய சிறந்த பணி, மறுவாழ்வு உதவிகள் வழங்கிய சிறந்த மாவட்டம், தேசிய மாற்றுத்திறனுடையோர் நிதி மற்றும் மேம்பாட்டு கழகத்தின் திட்டத்தினை செயல்படுத்தும் மாநில அளவிலான முறைப்படுத்தும் நிறுவனம், சிறந்த இணையதளம், விளையாட்டு வீரர் உள்ளிட்ட 14 பிரிவுகளில் தேசிய விருது வழங்கப்படும்.

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் / நிறுவனங்கள் www.disabilityaffairs.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். வரும் 15க்கு பின் விண்ணப்பங்கள் ஏற்கப்படாது.

Related Stories: