இலங்கை தேர்தலில் ராஜபக்சே கட்சி வெற்றி: அதிக வாக்குகளை பெற்றது

கொழும்பு: இலங்கையில் நாடாளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா மக்கள் கட்சி அதிக வாக்குகளை வாங்கி, அமோக வெற்றியை பெற்றுள்ளது. இலங்கையில் கடந்த மார்ச் 2ம் தேதி அந்நாட்டு அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். தொடர்ந்து, ஏப்ரல் 25ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஜூன் 20ம் தேதிக்கு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது. பிறகுஸ்ட் 5ம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன்படி, கொரோனா அச்சுறுத்துக்கு இடையிலும் நேற்று முன்தினம் நடந்த வாக்குப்பதிவில், 71 சதவீத வாக்குகள் பதிவானது.

இதையடுத்து, வாக்கு எண்ணிக்கை நேற்று காலை தொடங்கியது. ஆரம்பத்தில் இருந்தே ராஜபக்சேவின் ஸ்ரீலங்கா மக்கள் கட்சி, முன்னிலை பெற்று வந்தது. நேற்று பிற்பகல் வரை, சிங்களர்கள் அதிகம் வாழும் தெற்கு பகுதியில் 5 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், 60 சதவீதம் வாக்குகளை இக்கட்சி பெற்று வெற்றி பெற்றது. நேற்று நள்ளிரவு வரையில், பெரும்பாலான தொகுதிகளில் இக்கட்சியே முன்னணி பெற்றது. இதன் மூலம், இக்கட்சியின் அமோக வெற்றி உறுதியானது.

முன்னாள் அதிபர் வேட்பாளரான சஜித் பிரேமதாசாவால் தொடங்கப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தி கட்சி, வாக்கு எண்ணிக்கையில் 2வது இடத்தில் இருந்தது. இதன் தாய் கட்சியான ரணில் விக்ரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி 4வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மார்க்சிஸ்ட் ஜனதா விமுக்தி பெரமுனா கட்சி, 3வது இடத்தில் இருந்தது. முன்னதாக வாக்கு எண்ணிக்கை தொடங்கும் முன்பாக, ஸ்ரீலங்கா மக்கள் கட்சியின் நிறுவனரும், தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்சே (அதிபர் கோத்தபயாவின் சகோதரர்) கூறுகையில், “எங்கள் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி, புதிய அரசை அமைக்கும்,’’ என்றார்.

Related Stories: