திருப்பதியில் கொரோனா: அர்ச்சகர் பலி

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் அர்ச்சகர் கொரோனா தொற்றால் உயிரிழந்தார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 அர்ச்சகர்கள், ஊழியர்கள் என 180 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால், பாதிக்கப்பட்ட அர்ச்சகர்களுக்கு பதிலாக திருப்பதி கோவிந்தராஜ சுவாமி கோயில் அர்ச்சகர்கள் சிலர் தற்காலிக பணியிட மாற்றம் செய்து ஏழுமலையான் கோயிலில் பூஜைகள் நடந்து வருகிறது. இதில் ஈடுபட்ட அர்ச்சகர் ஒருவருக்கு திடீரென காய்ச்சல் ஏற்பட்டது. ஆனால், இது சாதாரண காய்ச்சல் என சிகிச்சை அளித்து, அவரை அதிகாரிகள் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தி உள்ளனர். இதனால், அவரின் உடல்நிலை மேலும் கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னர், அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானது. கடந்த ஞாயிறன்று அவர், திருப்பதி சுவிம்ஸ் தேவஸ்தான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

Related Stories: