×

செப்டம்பரில் ரூ.103 கோடியில் மேலும் 500 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்கப்படும்: முதல்வர் பழனிச்சாமி பேட்டி

மதுரை: கொரோனா தடுப்பு பணி பற்றி ஆட்சியர், அதிகாரிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை நடத்தினார். மதுரையில் நடந்த ஆய்வு கூட்டத்துக்கு பின் முதல்வர் பழனிச்சாமி செய்தியாளர் சந்தித்து கூறியுள்ளதாவது: கொரோனா மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் தேவையான அளவில் கையிருப்பு உள்ளது. சுகாதாரத்துறை எடுத்த நடவடிக்கை காரணமாக கொரோனா தொற்று குறைய தொடங்கி உள்ளது.

இந்தியாவிலேயே அதிக பரிசோதனைகள் தமிழகத்தில் செய்யப்பட்டுள்ளது. மதுரையில் விரைவில் எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கும். பிளாஸ்மா தானம் செய்ய மக்கள் முன்வர வேண்டும் என்று முதல்வர் பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. பெரியார் பேருந்து நிலையத்தை மேம்படுத்த ரூ.163 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி பகுதிகளில் 4,000 காய்ச்சல் கண்டறியும் முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது. புதிதாக 500 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வாங்க ரூ.103 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இ-பாஸ் வழங்குவதற்காக மேலும் ஒரு குழு செயல்படும் என்று முதல்வர் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இ-பாஸ் வழங்குவதற்காக ஒரு குழு செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலைகளுக்கு செல்லும் பணியாளர்களுக்கு இ-பாஸ் வழங்குவதில் தடை இல்லை. தேவையானவர்கள், அத்தியாவசிய பணிகளுக்கு செல்ல கூடியவர்கள் இ-பாஸ் பெற்று கொள்ளலாம். தென் மாவட்டங்களில் தொழில் தொடங்க பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.



Tags : interview ,CM ,CM Palanichamy ,Palanichany ,Corona , Corona, CM, Palanichany, Interview
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!