×

வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,718 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி

சென்னை: வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வந்த 5,718 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து வந்த 852 பேர், உள்நாட்டு விமானங்களில் இருந்து வந்த 675 பேர், ரயில், பேருந்து, சொந்த வாகனங்கள் மூலம் வந்த 4191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து ரயில், விமானம், பேருந்து மற்றும் இதர வாகனங்களில் தமிழகம் வந்தவர்களின் எண்ணிக்கை 5,07,092-ஆக அதிகரித்துள்ளது.


Tags : Tamil Nadu , Outback, overseas, Tamil Nadu, corona infection
× RELATED தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி