மதுக்கடைகள் திறந்ததில் பொதுநலன் ஏதுமில்லை: உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை: டாஸ்மாக் வருமானம் மூலம் சில நலத்திட்டங்களை அரசு செயல்படுத்தினாலும் பொதுநலன் ஏதுமில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். ஆண்டிபட்டியை சேர்ந்த கோபால் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில் ஐகோர்ட் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

தேனி அன்னை சத்யாநகரில் உள்ள மதுக்கடையை மூடக்கோரி கோபால் வழக்கு தொடர்ந்துள்ளார். தேனி அன்னை சத்யாநகர் மதுக்கடை இருக்குமிடத்தில் பள்ளி, கல்லூரிகள், வழிபாட்டுத் தலங்கள் உள்ளன என்று மனுவில் குறிப்பிட்டுள்ளார். பசுமை திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட குடியிருப்பில் மதுக்கடை உள்ளது என்று மனுதாரர் தெரிவித்துள்ளார். போதை மறுவாழ்வு மையத்தின் அருகில் மதுக்கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. அரசு நிர்ணயித்த விலையில் தான் மது விற்கப்படுகிறதா? நீதிபதிகள் சத்தியநாராயணன், ராஜமாணிக்கம் அமர்வு கேள்வி எழுப்பியுள்ளது.

மதுக்கூடங்களில் பாட்டில்கள், பிளாஸ்டிக் கழிவுகள் முறையாக அகற்றப்படுகிறதா? மதுக்கடைகளில் சமூக இடைவெளி, கிருமி நாசினி உள்ளிட்டவை முறையாக பயன்படுத்தப்படுகிறதா? ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். தேனி ஆட்சியர் மதுக்கடைகளில் திடீர் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: