×

கோவையில் டவுசர் கொள்ளையர்கள் மீண்டும் அட்டகாசம்...!! இருகூரில் 2 வீடுகளில் கொள்ளை முயற்சி..!! போலீசார் தீவிர விசாரணை!!!

கோவை:  கோவையில் டவுசர் கொள்ளையர்கள் மீண்டும் வீடு புகுந்து கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் இருகூர் அருகே ஆளில்லாத வீட்டின் பூட்டை உடைத்து டவுசர் கொள்ளையர்கள் நேற்றிரவு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு ஆன்லைனில் விற்பனை செய்வதற்கு, குழந்தைகளுக்கான விளையாட்டு பொருட்கள் மட்டுமே இருந்ததால், ஆத்திரத்தில் அவற்றை கலைத்துபோட்டுவிட்டு கொள்ளையர்கள் சென்றனர்.

பின்னர் மற்றொரு வீட்டில் அந்த கொள்ளையர்கள் பொருட்களை திருட சென்றுள்ளனர். அப்போது அவர்கள் புகுந்ததைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் கூச்சலிட்டனர். இதனைக்கண்ட டவுசர் திருடர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். பின்னர் தகவல் அறிந்து வந்த போலீசார் கொள்ளை முயற்சி நடந்த வீடுகளில் ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் வீட்டின் அருகே பொறுத்தப்பட்டுள்ள சிசிடிவி கேரமரா உதவியுடன் போலீசார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர். ஏற்கனவே இந்த கொள்ளை கும்பல் சூலூர், பீளமேடு, போத்தனூர் உள்ளிட்ட பகுதிகளில் கைவரிசையை காட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து  இவர்களை பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில், மீண்டும் டவுசர் கொள்ளையர்கள் அட்டகாசத்தை தொடங்கியுள்ளதால் மக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர்.

Tags : robbers ,Coimbatore ,robbery ,houses ,Irugur ,investigation , Drowser robbers ,Coimbatore ,robbery ,Irugur
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...