×

தவறான தகவல்களை பரப்பும் வகையில் செயல்பட்ட சீனாவுடன் தொடர்புடைய 2,500க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களை நீக்கியது கூகுள் நிறுவனம்

நியூயார்க்: தவறான தகவல்களை பரப்பும் வகையில் செயல்பட்ட, சீனாவுடன் தொடர்புடைய 2,500க்கும் மேற்பட்ட யூடியூப் சேனல்களை நீக்கியுள்ளதாக கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கூகுள் நிறுவனத்தின் வீடியோ பகிர்வு தளம் யூடியூப். அதில் சீனாவுடன் தொடர்புடைய தவறான தகவல்கள் வெளியாவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்கள் வந்தன.

இதுகுறித்து நடவடிக்கை மேற்கொண்டுள்ள கூகுள் நிறுவனம், கடந்த ஏப்ரல் - ஜூன் மாதங்களுக்கு இடையில் சீனாவுடன் தொடர்புடைய நடவடிக்கைகள் குறித்த எங்கள் விசாரணையின் ஒரு பகுதியாக, யூடியூப் சேனல்கள் நீக்கப்பட்டன. நீக்கப்பட்ட பெரும்பாலான சேனல்களில், தேவையற்ற அல்லது அரசியல் சாராத உள்ளடக்கம் இருந்துள்ளன. ஆனால் சில சேனல்களில் அரசியல் தொடர்புள்ள உள்ளடக்கங்கள் இருந்தன என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நீக்கப்பட்ட 2,500 சேனல்கள் குறித்த அடையாளத்தை கூகுள் வெளியிடவில்லை. இது தொடர்பாக, அமெரிக்காவில் உள்ள சீன தூதரகம் எவ்வித கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் தவறான தகவல்களை பரப்புவதாக கூறப்படும் குற்றச்சாட்டை சீனா ஏற்கனவே மறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.Tags : Google ,China , YouTube, Google
× RELATED நீக்கப்பட்ட ஒரே நாளில் கூகுள் ஸ்டோரில் பேடிஎம் மீண்டும் சேர்ப்பு