×

லெபனானைப் போல இங்கே வெடிக்காது... சென்னையில் அம்மோனியம் நைட்ரேட்டால் ஆபத்து இல்லை : மக்கள் பயப்பட வேண்டாம் என சுங்கத்துறை வேண்டுகோள்!!

சென்னை: சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளது என்று சுங்கத்துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். லெபனான் நாட்டில் அம்மோனியம் நைட்ரேட் வெடித்துச் சிதறி விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து சென்னை சுங்கத்துறை அதிகாரிகள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

லெபனானில் என்ன நடந்தது ?

*மத்திய கிழக்கு நாடான லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் 2450 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்த சம்பவம் நேற்று உலகளவில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

*இந்த விபத்தில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 4,000த்திற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

*வெடிபொருட்களுக்காக பயன்படுத்தப்பட்டிருந்த அமோனியம் நைட்ரேட் சுமார் 6 ஆண்டுகாலமாக லெபனான் துறைமுகத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது.

*அது முறையான பாதுகாப்பின்றி வைக்கப்பட்டிருந்த காரணத்தினால் தான் வெடித்தது என்று சர்வதேச அளவில் செய்தி வெளியான நிலையில், தற்போது சென்னை துறைமுகத்தில்,740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட், 37 கண்டெய்னரில் பாதுகாப்பாக உள்ளதா என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது.

சுங்கத்துறை அதிகாரிகள் விளக்கம்

இதுகுறித்து விளக்கம் அளித்த சுங்கத்துறை அதிகாரிகள், சென்னையில் சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்ட 740 மெட்ரிக் டன் அம்மோனியம் நைட்ரேட் மணலியில் உள்ள சுங்கத்துறைக்கு சொந்தமான வேதிகிடங்கில் பாதுகாப்பாக உள்ளது. ஆகவே மக்கள் அச்சமடைய தேவையில்லை. மணலியில் உள்ள வேதிக்கிடங்கை சுற்றி, குடியிருப்புகள் இல்லை.லெபனானில் நடந்தது போன்று நடக்க வாய்ப்பில்லை. . 6 வருடமாக பறிமுதல் செய்து வைக்கப்பட்ட அம்மோனியம் நைட்ரேட் ,நிபுணர்களால் ஆய்வு செய்யப்பட்டு பாதுகாப்புடன் உள்ளது. கொரோனா காலம் என்பதால் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் இ-ஏலம் முறையில் 740 மெட்ரிக் டன் அமோனியம் நைட்ரேட் ஏலம் விடும் நடவடிக்கையில் உள்ளது, எனத் தெரிவித்துள்ளனர்.

Tags : Lebanon ,Chennai ,public , Chennai, Ammonium Nitrate, Danger, Public, Fear, No, Customs, Request
× RELATED இஸ்ரேலில் நடந்த பயங்கரவாதத்...