நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நெகட்டிவ்வாக இருக்க வாய்ப்புள்ளது : ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவிப்பு!!

டெல்லி: 2020-21-ம் நிதி ஆண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி முன்பை விட  குறையும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்த ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதம் மாற்றமின்றி 4 சதவிகிதமாக தொடரும். ரிவர்ஸ் ரெப்போ வட்டி 3.3 சதவிகிதத்திலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. இருப்பினும் எதிர்காலத்தில் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்க வாய்ப்பு உள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் ஏப்ரல் - மே மாதங்கள் முதல் உயரத் தொடங்கியது. ஆனால் அதிகரித்து வரும் கொரோனாவால் அடுத்தடுத்து பொதுமுடக்கங்கள் அறிவிக்க வேண்டியதாயிற்று.

இதன் காரணமாக ஜூன் மாதத்தில் ஏற்றுமதி வெகுவாகக் குறைந்தது .உள்நாட்டு அளவில் பெட்ரோலியப் பொருட்களி்ன் தேவையும் குறைந்தது. மக்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள், காய்கறிகள் போன்றவற்றை வழங்குவதில் பாதிப்பு ஏற்பட்டதால், பணவீக்கமும் அதிகரித்தது. 2-வது காலாண்டில் பணவீக்கம் உயர்ந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் 2-வது பாதியில் பணவீக்கம் கட்டுக்குள் இருக்கும். இப்போதுள்ள சூழலில் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி நெகடிவ்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டு முழுவதும் அவ்வாறே இருக்கும். எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories: