×

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு: பஞ்சாயத்து தலைவர் உயிரிழப்பு

குல்காம் : ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பஞ்சாயத்து தலைவர் உயிரிழந்துள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து கடந்த  ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது.  அம்மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாகவும் மத்திய அரசு பிரித்தது.  சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு நேற்றோடு ஒரு ஆண்டு நிறைவு அடைந்தது. இதனால், அங்கு  அசம்பாவித சம்பவங்களை பயங்கரவாதிகள் நிகழ்த்தக்கூடும் என்பதால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், குல்காமில் பஞ்சாயத்து தலைவர் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் உள்ள வெசு பகுதியில் பஞ்சாயத்து தலைவராகவும், குல்காம் மாவட்ட பாஜக துணை செயலாளராகவும் இருந்து வருபவர் சஜ்ஜத் அகமது காண்டே.  இன்று காலை அகமது வீட்டை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டு தாக்குதல் நடத்தினர். இதில் படுகாயமடைந்த அகமதை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சஜாத் அகமது  உயிரிழந்தார். பயங்கரவாதிகள் நடமாட்டத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. கடந்த சில வாரங்களில் பாஜக தலைவர்களை குறிவைத்து நடத்தப்படும் 4-வது தாக்குதல் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.  



Tags : district ,Terrorist firing ,Jammu ,Kashmir ,Panchayat leader ,Gulkham ,Terrorist shooting , Jammu and Kashmir, Gulkham, terrorists, firing, panchayat leader, casualties, BJP
× RELATED ஜம்முவின் லித்தியத்தை கொள்ளையடிக்கும் பாஜ: மெகபூபா முக்தி கடும் தாக்கு