×

2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

கோபி: 2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், இந்த ஆண்டு பள்ளிகளில் சுதந்திர தினம் கொண்டாடுவது குறித்து முதல்வர் ஆலோசனை செய்து முடிவெடுப்பார். தற்போதைய சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க முடியாது. பள்ளிகள் திறப்பு குறித்து பெற்றோர்கள்,  கல்வியாளர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு செய்யப்படும். 2013ல் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் நிலை கவலையளிக்கிறது. அதற்கு அரசு தான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில், அரசுப்பள்ளி மாணவர்கள், கல்வி பயில வசதியாக, முதல்வர் மூலம் கல்வி தொலைக்காட்சி துவங்கப்பட்டுள்ளது. பள்ளியில் பாடங்கள் போதிப்பது போல், தனியார் டிவி சேனல்கள் மூலம் கல்வி போதிக்கப்படுகிறது. தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கையை கண்டு, இந்தியாவே வியந்து பார்த்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மட்டுமே, அரசுப் பள்ளிகளில் உயர் ரக ஆய்வகம் வசதி துவங்கப்பட்டுள்ளது. இதுவரை, 52 லட்சம் மாணவ, மாணவியருக்கு லேப்டாப் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே, க்யூ ஆர் கோடு மூலம் கல்வி கற்கும் முறை, தமிழகத்தில் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை குறித்து ஆராய, நிபுணர் குழு ஒன்று அமைக்கப்படும். இக்குழுவினரின் கருத்துகளை அறிந்து, என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்பதை அரசு முடிவு செய்யும், என்று கூறியுள்ளார்.



Tags : Senkottayan ,Teacher Qualification Examination ,Minister of School Education , School Education, Minister Senkottayan, Independence Day
× RELATED திருவெறும்பூர் பகுதியை சேர்ந்த 5...