காஷ்மீர் பிரச்சனையை பேச்சு மூலம் தீர்க்க சீனா யோசனை : உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்க எந்த உரிமையும் இல்லை என சீனாவுக்கு இந்தியா காட்டம்!!

டெல்லி : இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிட எந்த உரிமையும் கிடையாது என்று சீனாவுக்கு வெளியுறவுத் துறை அமைச்சகம் பதிலடி கொடுத்துள்ளது. ஜம்மு - காஷ்மீரி மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு ஓர் ஆண்டாக ஆகும் நிலையில், பாஜகவினர் அதனை கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் பீஜிங் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அந்நாட்டு வெளியுறவு செய்தி தொடர்பாளர் வாங் வென்பின், ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா எடுத்த முடிவு தன்னிச்சையானது என்றும் செல்லுபடியாகதது என்றும் கூறினார். நீண்ட காலமாக உள்ள காஷ்மீர் பிரச்னையை இந்தியாவும் பாகிஸ்தானும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

இந்தியாவும் பாகிஸ்தானும் அண்டை நாடுகள் என்பதால் இந்த விவகாரத்தில் இருந்து விலகி செல்ல முடியாது என்று கூறிய அவர், இந்த பிரச்சனையை அமைதியான முறையில் ஆலோசனைகளின் மூலம் தீர்க்க வேண்டிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அவரின் கருத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் மூக்கை நுழைக்க சீனாவுக்கு எந்த உரிமையும் இல்லை என்று காட்டமாக கூறியுள்ளது. ஏற்கனவே லடாக் பகுதியில் கல்வான் பள்ளத்தாக்கை சொந்தம் கொண்டாடி வரும் சீனா, அங்கு படைகளை குவித்து வந்ததால் இரு நாட்டு எல்லையில் பதற்றம் ஏற்பட்ட நிலையில், தற்போது காஷ்மீர் விவகாரத்திலும் அந்நாடு தலையிடுவது இரு நாடுகளுக்கு இடையேயான மோதலை அதிகப்படுத்தி உள்ளது. 

Related Stories: