அகமதாபாத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 8 பேர் பலி: சோகமான சம்பவம் வருத்தம் அளிக்கிறது...பிரதமர் மோடி டுவிட்டரில் இரங்கல்.!!!

அகமதாபாத்: அகமதாபாத்தில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள ஷ்ரே மருத்துவமனையில் இன்று  அதிகாலை 3 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏற்பட்டது. மருத்துவமனையின் 4வது மாடியில் உள்ள ஐசியு வார்டில் இந்தத் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 8 நோயாளிகள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். பலியானவர்களில் 5  ஆண்கள், 3 பெண்கள் அடங்குவர். இவர்கள் இங்கு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் ஆவார்கள்.

தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் தீயிணை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மருத்துவமனையில் பிற நோயாளிகள் 40 பேர் சிகிச்சைப் பெற்று வந்தனர். தீவிபத்தை அடுத்து இவர்கள் எஸ்விபி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மற்ற நோயாளிகளை வெளியேற்றியதில் போலீசார், தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். கொரோனா நேரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பையும் வேதனையும் ஏற்படுத்தியுள்ளது.

இதற்கிடையே, மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில், அகமதாபாத்தில் ஏற்பட்ட சோகமான  மருத்துவமனை தீ விபத்தில் வருத்தம் அளிக்கிறது. துயரமடைந்த குடும்பங்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். விபத்தின் நிலைமை குறித்து முதல்வர் விஜய் ருபானி மற்றும்  மேயரிடம் பட்டேலிடம் பேசினேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு நிர்வாகம் அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது என்றும் பதிவிட்டுள்ளார்.

அகமதாபாத் நகர உதவி ஆணையர் எஸ்பி. ஸலா பேட்டி:

தீ விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உள்ளது. மருத்துவமனையில் தீ இன்று அதிகாலை 3.30 மணியளவில் பிடித்தது. இப்போது தீ கட்டுப்படுத்தப்பட்டு விட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு  அனுப்பப்பட்டன என்றார்.

Related Stories: