×

நடிகர் சங்க தேர்தல் வழக்கு ஆக.31ல் இறுதி விசாரணை நடைபெறும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் கடந்த 2019ம் ஆண்டு ஜூன் மாதம் 23ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலை ஒத்திவைத்து சங்கங்களின் பதிவாளர் உத்தரவு பிறப்பித்தார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், திட்டமிட்டப்படி தேர்தலை ஜூன் 23ம் தேதியன்று நடத்தவும், மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தை கவனிக்க பதிவுத்துறை ஐஜி கீதாவை நியமனம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்நிலையில் தமிழக அரசின் தனி அதிகாரி நியமனத்தை ரத்து செய்யக் கோரி நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரும் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்ற தனிநீதிபதி, 2019 ஜூலை் 23ம் தேதி நடந்த தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். தனிநீதிபதியின் உத்தரவை எதிர்த்து, நடிகர் விஷால் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மீண்டும் தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனிநீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதி விசாரணை ஆகஸ்ட் 31ம் தேதி நடைபெறும் என்று உத்தரவிட்டனர்.

Tags : hearing ,High Court ,Actors' Union ,Actors , Casting Association Election, Case, Aug. 31, Final Hearing, High Court
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...