×

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவரிடம் விசாரணை

அண்ணாநகர்: திருமங்கலம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் இரவு 13 வயது சிறுமி வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்தாள். அப்போது, ஒரு முதியவர் அந்த சிறுமியை அழைத்து பாலியல் தொல்லை செய்தார். இதனால் சிறுமி அலறியடித்துக்கொண்டு, தாயிடம் கூறி அழுதாள். இதுகுறித்து சென்னை நகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அப்பகுதி பெண்கள் புகார் அளித்தனர். சம்பவ இடத்துக்கு ரோந்து வாகனத்தில் கோயம்பேடு போலீசார் விரைந்து சென்று முதியவரை கைது செய்து காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அவர், தான் செய்த குற்றத்தை ஒப்பு க்கொண்டார்.

இதையடுத்து, முதியவரை நேற்று மதியம் திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தொடர்ந்து, பாதிக்கப்பட்ட சிறுமியின் தாயை வரவழைத்து பெண் போலீசார் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் சிறுமியின் தாயிடம், “முதியவர் தெரியாமல் செய்து விட்டார். அவரை மன்னித்து விடுங்கள். புகார் கொடுக்க வேண்டாம்’’ என சமாதானம் பேசி போலீசார் எழுதிவாங்கினர். இதேபோல், “இனிமேல் தவறுகளை செய்ய மாட்டேன்’’ என அந்த முதியவரிடமும் எழுதி வாங்கி அவரை பெண் போலீசார் அனுப்பிவைத்தனர்.

Tags : Sexual harassment , Girl, sexual harassment, to the elderly, interrogation
× RELATED சிக்கும் பெண்களை சீரழிக்கும் கும்பல்:...