2 எம்.பிக்களுக்கு நோய் தொற்று உறுதியான நிலையில் நாகை அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற மேலும் ஒரு எம்எல்ஏக்கு கொரோனா

மயிலாடுதுறை: நாகையை பிரித்து 38வது மாவட்டமாக மயிலாடுதுறை அறிவிக்கப்பட்டது. மாவட்டம் உருவாக்குவதற்கான கருத்து கேட்பு கூட்டம், நாகப்பட்டினத்தில் கடந்த 30ம் தேதி நடந்தது. இதில் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், வருவாய்துறை முதன்மை செயலாளர் பனீந்திரரெட்டி, எம்.பி.க்கள் செல்வராசு, ராமலிங்கம், சீர்காழி, பூம்புகார் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இவர்களில் எம்.பி.க்கள்  செல்வராசு, ராமலிங்கம் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டனர். இவர்களை தொடர்ந்து, பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. பவுன்ராஜிக்கு நேற்று கொரோனா உறுதியானது.

இதை தொடர்ந்து அவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அரசு நிகழ்ச்சி யில் பங்கேற்றதால் தான் எம்.பி.க்கள் 2 பேர் மற்றும் எம்எல்ஏ ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதனால் நிகழ்ச்சியில்  பங்கேற்ற மற்றவர்களும் அச்சத்தில் உள்ளனர். புதுச்சேரி அமைச்சருக்கு கொரோனா: புதுச்சேரி சமூகநலத்துறை அமைச்சர் கந்தசாமி, அவரது மகன் விக்னேஷ் ஆகியோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

* கருணாஸ் எம்எல்ஏக்கு கொரோனா

நடிகரும், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தொகுதி எம்எல்ஏவுமான கருணாசின் தனி பாதுகாப்பு போலீஸ்காரரான நாதனுக்கு, கொரோனா தொற்று உறுதியானது. இதைத்தொடர்ந்து, கருணாசும் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். இந்நிலையில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானதாகவும், திண்டுக்கல்லில் உள்ள தனது விடுதி ஒன்றில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Related Stories: