விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக்கில் சேருவதற்கான சேர்க்கை முடிவு வெளியீடு: தெலங்கானா மாணவன் முதலிடம்

சென்னை: விஐடி பல்கலைக்கழகத்தில் நடப்பு கல்வியாண்டிற்கான சேர்க்கை வெளியிடப்பட்டுள்ளன. இதில் தெலங்கானாவை சேர்ந்த மாணவன் முதலிடம் பெற்றுள்ளார். 2020-21ம் கல்வியாண்டில் இந்தியா உட்பட 12 வெளிநாடுகளிலிருந்து மொத்தம் 1,83,059 மாணவர்கள் விஐடி பி.டெக். படிப்பில் சேருவதற்கு விண்ணப்பித்தனர். இதுகுறித்து விஐடி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் கூறியதாவது: பட்டப் படிப்பு சேர்க்கை மாணவர்களின் மதிப்பெண் தகுதி அடிப்படை மற்றும் இந்தியாவில் உள்ள பல்வேறு கல்வி வாரியங்களில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களின் மதிப்பெண் சமப்படுத்தி, விஐடி வேலூர், சென்னை, அமராவதி (ஆந்திர பிரதேசம்) போபாலில் (மத்திய பிரதேசம்) உள்ள 36 பி.டெக் மற்றும் பி.டெஸ் பாடப் பிரிவில் சேர்க்கை நடைபெறும்.

விஐடி வெளியிட்டுள்ள சேர்க்கை முடிவில் முதல் இடத்தை தெலங்கானாவை சேர்ந்த சகரி கவுசல் குமார் ரெட்டி, 2வது கேரளாவை சேர்ந்த கவுதம் ஜோதிலால், 3வது கர்நாடகாவை சார்ந்த ரிசித்டியாகி, 4வது ஆந்திராவை சேர்ந்த சாய் விஸ்வநாத் சவுத்ரி தேவலா, 5வது கர்நாடகாவை சேர்ந்த ராகுல் ஜார்ஜ், 6வது தெலங்கானாவை சேர்ந்த த்ரினிஷ் ரெட்டி, 7வது தெலங்கானாவை சேர்ந்த நீரஜ் குண்டா, 8வது மேற்கு வங்கத்தை சேர்ந்த அங்கித் குஹா, 9வது ராஜஸ்தானை சேர்ந்த உதித் மிமாணி, 10வது மேற்கு வங்கத்தை சேர்ந்த சவுரித் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். மாணவர்கள் சேர்க்கை முடிவுகளை www.vit.ac.in. இணையதளம் வழியாக தெரிந்து கொள்ளலாம்.

Related Stories: