ரூ.5 லட்சம் போதை பொருட்கள் பறிமுதல்

புழல்: செங்குன்றம் அடுத்த நல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஆட்டந்தாங்கல் பாலமுருகன் நகர் கிருஷ்ணசாமி பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் பாலகுமரன் (35). இவர் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் தனது வீட்டின் பின்புறம் ஓலைக் கொட்டகையில் குட்கா பொருட்களை பதுக்கி விற்பனை செய்வதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் குற்ற நுண்ணறிவுப் பிரிவு மற்றும் சோழவரம் போலீசார் நேற்று காலை சம்பவ இடம் சென்று சோதனை செய்தனர். அப்போது 50 மூட்டைகளில் குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ரூ..5 லட்சம் குட்கா பொருட்களை பறிமுதல் செய்துபாலகுமரன் கடைஊழியர் மகேஷ் (40) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories:

>