வாலிபர் சடலத்தை சுடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு தூய்மை பணியாளர்கள் போராட்டம்

புழல்: செங்குன்றம் நாரவாரிகுப்பம் பேரூராட்சிக்குட்பட்ட குப்பா மணி தோப்பு துரைசாமி ரெட்டி தெருவைச் சேர்ந்தவர் முருகன் (55). பேரூராட்சி  தூய்மை பணியாளர். இவரது மகன் செல்வம் (31) உடல் நலக்குறைவால் நேற்று முன் தினம் இரவு இறந்துவிட்டார். அங்குள்ள சுடுகாட்டில் செல்வத்தின் சடலத்தை புதைக்க மறுக்கப்பட்டது. இதை கண்டித்து தூய்மைப் பணியாளர் முருகன் மற்றும் அவருடன் பணியாற்றும் தூய்மைப் பணியாளர்கள் குடும்பத்தினர் பேரூராட்சி துப்புரவு அலுவலகம் முன்பு அம்பேத்கர் தெருவில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த செங்குன்றம் போலீசார்விரைந்து வந்தனர். அவர்கள் போரட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேரூராட்சி நிர்வாக செயல் அலுவலர் சதீஷ், தூய்மைப் பணி ஆய்வாளர் மதியழகன்  ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இந்த சுடுகாட்டில் இறந்தவர்களின் உடல்களை எரிப்பதற்கு மட்டுமே அனுமதி உள்ளது. புதைக்க அனுமதி கிடையாது. எரிப்பதற்கான பணிகளை மேற்கொள்ளலாம் என பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது செங்குன்றம் பகுதியில் உள்ள அரசியல் பின்புலம் உள்ள உறவினர்கள் இறந்தால் சுடுகாட்டில் புதைத்துள்ளனர்.

இதில் வேலை செய்யும் மகன் இறந்துவிட்டதால் அவனுடைய சடலத்தையும் புதைக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். எங்களுக்கு அனுமதி இல்லை என்றால் மற்றவர்கள் எப்படி நீங்கள் அனுமதி கொடுத்தீர்கள் என்று போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே நிர்வாக செயல் அலுவலர் சுடுகாட்டில் ஒரு பகுதியில் சடலத்தை புதைக்க அனுமதி கொடுத்தார். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: