×

கேரளாவில் கனமழை 6 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

திருவனந்தபுரம்: வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி உள்ளதால் இன்று முதல் வரும் 9ம் தேதி வரை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து,  இன்று முதல் 9ம் தேதி வரையில் கோழிக்கோடு, வயநாடு, இடுக்கி, பாலக்காடு, மலப்புரம், கண்ணூர் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று எர்ணாகுளம், மலப்புரம் உட்பட 7 மாவட்டங்களுக்கும், நாளை எர்ணாகுளம் இடுக்கி உட்பட 9 மாவட்டங்களுக்கும், 8ம் தேதி பத்தனம்திட்டா கோட்டயம் உட்பட 11 மாவட்டங்களுக்கும், 9ம் தேதி எர்ணாகுளம், இடுக்கி உட்பட 9 மாவட்டங்களுக்கும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று திருவனந்தபுரம் உட்பட 5 மாவட்டங்களுக்கும், நாளை பத்தனம்திட்டாஉட்பட 5 மாவட்டங்களுக்கும், 8ம் தேதி கொல்லம் உட்பட 3 மாவட்டங்களுக்கும், 9ம் தேதி பத்தனம்திட்டா உட்பட 3  மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


Tags : districts ,Kerala , Kerala, Heavy rains, District 6, Red Warning
× RELATED தொடர்மழையால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு