திருப்பதி ஏழுமலையான் கோயில் கல்யாண உற்சவ டிக்கெட் விற்பனை: ஆன்லைனில் இன்று துவக்கம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் மலையப்ப சுவாமி, ஸ்ரீதேவி பூதேவி தாயாருக்கு கல்யாண உற்சவசேவை நடந்து வருகிறது. கொரோனா பரவல் காரணமாக உற்சவ சேவையில் பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. அர்ச்சகர்கள் மட்டும் மதியம் 12 மணி முதல் 1 மணி வரை நடத்தி வருகின்றனர். இச்சேவை தேவஸ்தான தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இந்நிலையில், தங்கள் வேண்டுதலுக்கு ஏற்ப உற்சவ சேவையில் பங்கேற்க வேண்டும் என நினைக்கும் பக்தர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. இதனை கருத்தில் கொண்டு முதல் முறையாக கல்யாண உற்சவ சேவையில் ஆன்லைனில் பக்தர்கள் பங்கேற்கும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  விருப்பம் உள்ள பக்தர்கள் இன்று முதல் வரும் 31ம் தேதி வரை ஆன்லைனில் நடக்கும் உற்சவ சேவையில் பங்கேற்கலாம். இதற்கான டிக்கெட்டுகளை இன்று காலை 11 மணி முதல், (www.tirupatibalaji.ap.gov.in) இணையத்தில் தங்கள் விவரங்களை அளித்து ரூ.1000 கட்டணம் செலுத்தி ரசீதை பெறலாம்.

Related Stories: