வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட சராசரியாக 59 வயது மதிக்கத்தக்க 100 பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இவர்களில் 90 சதவீதம் பேர் நுரையீரல் பாதிப்பினால் அவதிப்பட்டு வருகின்றனர். தொற்றுக்குப் பிறகு அவர்களின் நுரையீரல் காற்றை சுவாசிப்பதிலும், அதை ஆக்சிஜனாக மாற்றும் செயல்பாடுகளிலும் பழைய நிலைக்கு திரும்பவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இன்னும் சிலர், மருத்துவமனையில் இருந்து வந்த பிறகும் கடந்த 3 மாதங்களாக ஆக்சிஜன் உபகரணத்தை நம்பி வாழ்கின்றனர். மீதமுள்ள 10 சதவீதம் பேரில், 5 சதவீதத்தினர் மீண்டும் கொரோனாவால் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மன அழுத்தம், நோயின் தாக்கத்தில் இருந்து இன்னும் மீளவில்லை,’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: