வரலாற்றில் முதல் முறையாக பொது இடங்களில் நின்று ராணுவம் பேண்ட் இசை: கொரோனா வீரர்களுக்கு மரியாதை

புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் பல லட்சம் பேர் கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் உயிரை பணயம் வைத்து பாடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், வருகிற 15ம் தேதி நாட்டின் 74வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டும், கொரோனா பணியாளர்களை கவுரவிக்கும் வகையிலும் நாடு முழுவதும் பொது இடங்களில் நின்று ராணுவ இசைக்குழு வாசிக்க உள்ளது. இந்நிகழ்ச்சி ஏற்கனவே கடந்த 1ம் தேதியில் இருந்து தொடங்கியும் விட்டது.

இது பற்றி மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வரலாற்றில் முதல் முறையாக நாடு முழுவதும் ராணுவ இசைக்குழு நிகழ்ச்சி மூலமாக சுதந்திர தினவிழா கொண்டாடப்படுகிறது. மேலும், ஆகஸ்ட் 1ம் தேதி முதல் 15 நாட்களுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளில், கொரோனா ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படும்,’ என கூறப்பட்டுள்ளது. இதன்படி, சென்னையில் வரும் 9ம் தேதி இசை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

Related Stories: