×

தலைமை நிலைய அலுவலக செயலாளர், தலைமை செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் பொறுப்புகளிலிருந்து விடுவிப்பு: தலைமை கழகம் அறிவிப்பு

சென்னை: திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்படுகிறார் என்று திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது குறித்து ஒழுங்கு நடவடிக்கை தலைமை கழகம் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாக கழகத்திலிருந்து நீக்கி வைப்பதுடன் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்க கூடாது என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Tags : KK Selvam ,Chief Corporation , Headquarters, Office Secretary, Chief Executive Officer KK Selvam, Release, Leadership Corporation
× RELATED ரிங் டோன் இசையமைக்க வாங்கிய...