அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நிறைவடைந்ததை அடுத்து 28 ஆண்டு கால விரதத்தை முடித்தார் 81 வயதான மூதாட்டி

டெல்லி: அயோத்தி ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா நிறைவடைந்ததை அடுத்து, 81 வயதான ஊர்மிளா சதுர்வேதி என்ற மூதாட்டி, தனது 28 ஆண்டு கால விரதத்தை முடித்தார். சுமார் 28 ஆண்டுகளுக்கு முன்பு

மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரை சேர்ந்த ஊர்மிளா சதுர்வேதி , அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகளை தொடங்கினால் மட்டுமே இனி உணவு சாப்பிடுவது என உறுதிமொழி எடுத்தார். அதன்படி கடந்த 28 ஆண்டுகளாக தயிர், பால் மற்றும் பழங்களை மட்டுமே உணவாக உண்டு வந்துள்ளார். இந்த நிலையில் இன்று ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழாவை முன்னிட்டு தனது நீண்ட கால  உண்ணாவிரதத்தை முடித்துள்ளார்.

Related Stories:

>