கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்: கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

மைசூர்: கபினி அணையில் இருந்து வினாடிக்கு 50 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 40 ஆயிரம் கனஅடியாக உள்ளது. நீர் திறப்பு அதிகரிப்பால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கேரளத்தை தொடா்ந்து, கா்நாடகத்திலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கேரள மாநிலத்தின் வயநாடுபகுதியில் தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் கேரளத்தில் இருந்து கா்நாடகத்திற்கு பாய்ந்தோடும் கபினி ஆற்றில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. மைசூரு மாவட்டத்தின் டி.நரசிபுரா வட்டத்தில் கபினி ஆற்றுக்கு இடையே அமைந்துள்ள கபினி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மழை அளவு அதிகரித்ததால், அணைக்கு நீா்வரத்து பெருகியுள்ளது.

திங்கள்கிழமை அணையில் இருந்து விநாடிக்கு 2,500 கனஅடியாக திறந்துவிடப்பட்டிருந்த தண்ணீா், நேற்று மாலை 6 மணி அளவில் விநாடிக்கு 30 ஆயிரம் கன அடி தண்ணீா் அணையில் இருந்து திறந்துவிடப்பட்டது. கேரளத்தில் தொடா்ந்து மழை பெய்துவருவதால், அணையின் நீா்மட்டம் அதன் அதிகப்பட்ச உயரமான 2,284 அடியை இரண்டொரு நாளில் எட்டும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. கபினி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், வெள்ள அபாய எச்சரிக்கையை விடுத்துள்ள நீர்வளத்துறை, ஆற்றங்கரையோரத்தில் தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் மேட்டுப்பகுதிகளுக்குசெல்லுமாறு கேட்டுக்கொண்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீா் பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>