×

கரூர் பகுதியில் சூறாவளி காற்று மின்தடையால் மக்கள் அவதி

கரூர்: வங்க கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக நேற்று கரூர் பகுதியில் சூறாவளி காற்று வீசியதால் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. அவ்வபோது மின்தடை ஏற்பட்டதால் மக்கள் அவதிப்பட்டனர். வங்க கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுநிலை ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக கரூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே பலத்த காற்று சூறாவளியை போல வீச தொடங்கியது. இந்த காற்றின் காரணமாக சாலைகளில் வாகனங்களில் செல்ல முடியாமல் அனைத்து தரப்பினர்களும் அவதிப்பட்டனர்.

பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதற்கிடையே நேற்று மதியம் 1 மணி முதல் 3 மணி வரை 2 மணி நேரம் தாந்தோணிமலை பகுதியில் மின்தடை செய்யப்பட்டது. காற்றின் காரணமாக மின்கம்பிகள் பழுது காரணமாக மின்தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் அவ்வப்போது விட்டு விட்டு மின்தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் சிரமத்துக்கு ஆளாகினர்.

Tags : area ,Karur , Karur, hurricane winds, blackouts, people suffering
× RELATED மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த...