×

நடுக்கடலில் மாயமான ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இன்று மீட்பு

ராமேஸ்வரம்: நடுக்கடலில் மாயமான ராமேஸ்வரம் மீனவர்கள் 7 பேர் இன்று மீட்கப்பட்டு கரை திரும்பினர். ராமேஸ்வரம் பாக் ஜலசந்தி கடற்பகுதியில் கடந்த திங்கட்கிழமை 700 விசைப்படகுகளில் 3000திற்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். செவ்வாய்க்கிழமை காலையில் விசைப்படகுகள் அனைத்தும் கரை திரும்பிய நிலையில் பாக்கியம் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகில் சென்ற முனியசாமி, சாகுல் ஹமீது, திரவியம் உள்பட ஏழு மீனவர்கள் மட்டும் செவ்வாய்கிழமை மாலை வரையிலும் கரை திரும்பவில்லை. மீனவர்களை மீட்க வலியுறுத்தி மீனவர்களின் உறவினர்கள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் முறையிட்டனர்.

இந்நிலையில் இன்று அதிகாலை ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இரண்டு விசைப்படகில் 14 மீனவர்களை கொண்ட மீட்புக் குழுவினர் மாயமான மீனவர்களை தேடிச் சென்றனர். மீட்புக் குழுவினர் கடலில் தேடிக் கொண்டிருக்கும் போது இலங்கையைச் சேர்ந்த மீனவர்கள் வயர்லெஸ் ரேடியோ மூலம் அளித்த தகவலின்படி மாயமான 7 மீனவர்களையும் படகினையும் நெடுந்தீவு அருகே மீட்புக் குழுவினர் மீட்டனர். மீட்கப்பட்ட மீனவர்கள் இன்று மாலை ராமேஸ்வரம் திரும்பினர்.



Tags : fishermen ,Rameswaram ,Mediterranean , Rameswaram, fishermen
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...