×

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு..!! தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்!!!

நெல்லை: அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் திட்டத்தை, மத்திய அரசு உடனடியாக கைவிட வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நெல்லையில் நடந்த போராட்டத்தில் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை நிறுத்தக்கோரியும், இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் முழக்கங்களை எழுப்பினர். அப்போது தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூமாபட்டியில் நடைபெற்ற போராட்டத்தில் காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து வழங்கக்கோரி எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் மயிலாடுதுறையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முத்தலாக் தடை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் தொடர் முழக்கங்களை எழுப்பினர். இதனையடுத்து கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் காஷ்மீரில் சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்க வேண்டும் என்று எஸ்.டி.பி.ஐ. அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். இதேபோல் மன்னார்குடி, உடுமலைப்பேட்டை, பல்லடம், வள்ளியூர் உட்பட தமிழகத்தின் பல்வேறு இடங்களிலும் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Parties ,Ram ,Ayodhya ,STBI ,Tamil Nadu , Ayodhya, Ram Temple, Tamil Nadu, Demonstration
× RELATED மாநிலங்களவை துணைத் தலைவர்...