×

கட்டுக்கடங்காத கொடூர நச்சுயிரி கொரோனா: தமிழகத்தில் ஒரே நாளில் 112 பேரின் உயிர் வேட்டை; பலி எண்ணிக்கை 4,461 ஆக உயர்வு

சென்னை: தமிழகத்தில் மேலும் 5,175 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,73,460-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் இன்று மேலும் 112 பேர் உயிரிழப்பு; இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 4,461-ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வேறு நோய் பாதிப்பு இல்லாத 8 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6,031 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ள நிலையில் இதுவரை கொரோனாவில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,14,815-ஆக அதிகரித்துள்ளது என சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu , Corona, Tamil Nadu, killed
× RELATED புதுச்சேரியில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 370-ஆக உயர்வு