×

பொன் வேணுமா?; பெண் வேணுமா? கலகத்தில் புது மாப்பிள்ளைகள்: இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ரூ.976 உயர்வு; சவரன் ரூ.42,408-க்கு விற்பனை.!!!

சென்னை: சென்னையில் இன்று ஒரே நாளில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு 976 ரூபாய் உயர்ந்துள்ளது. உலகையே ஆட்டி படைத்து வரும் கொரோனாவால் சர்வதேச அரங்கில் பொருளாதாரம் ஆட்டம் கண்டுள்ளது. இதனால் மஞ்சள் உலோகம் என்று அழைக்கப்படும் தங்கத்தில் பலரும் முதலீடு செய்து வருகின்றனர். இதன் காரணமாக தங்கத்தின் விலை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு நாளுக்கு நாள் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. அந்த வகையில் ஆபரணத் தங்கம் தொடர்ந்து விலை அதிகரித்துள்ளது.

சென்னையில் இன்று காலை ஒரு கிராம் ஆபரணத் தங்கம் விலை 99 ரூபாய் அதிகரித்து 5,301 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு 792 ரூபாய் உயர்ந்து 42,408 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில், மாலைக்குள் 184 ரூபாய் சவரனுக்கு உயர்ந்து ரூ.42,592-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்று மட்டும் சவரனுக்கு ரூ.976 உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் ஒரு கிராம் தங்கம் ரூ.122 உயர்ந்துள்ளது. இன்று காலை கிராமிற்கு 99 உயர்ந்த நிலையில், மாலையில் மேலும் 23 ரூபாய் உயர்ந்துள்ளது. இதன் மூலம் சென்னையில் ஒரு கிராம் தங்கம் ரூ.5,324க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 ஊரடங்கு தளர்த்தப்பட்ட நாள் முதலே தங்கம் விலை தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. 42,000 ரூபாயைத் தாண்டி வாடிக்கையாளர்களை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது. பொன் வேணுமா?; பெண் பெண் வேணுமா? என்ற நிலையில் புது மாப்பிள்ளைகள் தவித்து வருகின்றனர்.Tags : grooms ,Newcomers , Want gold ?; Want a girl? Newcomers in riot: Rs 976 hike for jewelery gold razor in one day today; Sawaran for sale for Rs. 42,408 !!!
× RELATED சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின்...