×

அமராவதி அணை நீர்மட்டம் ஒரே நாளில் 11 அடி உயர்வு

உடுமலை: நீர்வரத்து அதிகரித்ததால் அமராவதி அணை நீர்மட்டம் ஒரேநாளில் 11 அடி உயர்ந்தது.உடுமலை அருகே உள்ள அமராவதி அணை 90 அடி உயரம் கொண்டது. இதன்மூலம், திருப்பூர், கரூர் மாவட்டங்களில் சுமார் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. நூற்றுக்கணக்கான கிராமங்கள் குடிநீர் வசதி பெறுகின்றன.
தென்மேற்கு பருவமழை காலத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்யும் மழை அணையின் முக்கிய நீராதாரமாக உள்ளது. இந்தாண்டு ஆகஸ்ட் மாதம் துவங்கியும், தென்மேற்கு பருவமழை வேகம் பிடிக்காததால் அணை நீர்மட்டம் குறைவாகவே இருந்தது.இந்நிலையில், கடந்த இரு நாட்களாக பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் அணையின் நீர்மட்டம் 53 அடியாக இருந்தது. நீர்வரத்து 564 கனஅடியாகவும், வெளியேற்றம் 9 கன அடியாகவும் இருந்தது. நேற்று காலை நீர்வரத்து 8000 கனஅடியாக அதிகரித்தது. இதனால், நீர்மட்டம் ஒரே நாளில் 61 அடியானது.

தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளதால் அணை நீர்மட்டம் வேகமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், அமராவதி பாசன பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.நேற்று காலை வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லிமீட்டரில்):அமராவதி 12, வால்பாறை 87, அப்பர் நீராறு 108, லோயர் நீராறு 86,  காடம்பாளைம் 59, சர்க்கார்பதி 38, மணக்கடவு 47, தூணக்கடவு 47, பெருவாரிபள்ளம் 60, அப்பர் ஆழியார் 15,  சோலையாறு 126, பரம்பிக்குள்ம 70, ஆழியார் அணை 12 மி.மீ.

Tags : Amravati Dam , Amravati ,Dam ,water , 11 feet , one day
× RELATED அமராவதி அணையில் இருந்து வினாடிக்கு 6,500 கனஅடி நீர்திறப்பு..!!