×

அமைச்சர்கள், முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும்: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அமைச்சர்கள், முதல்வர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை பின்பற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் பன்மடங்கு அதிகரித்து வருகிறது. பாதிப்பு அதிகமாக இருந்த பகுதியான சென்னையில் தற்போது பாதிப்பு குறைந்து வரும் நிலையில், பிற மாவட்டங்களில் பாதிப்பு உயர்ந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் ஆகஸ்ட் 31ம் தேதி வரை 7ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பல தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், கொரோனா பாதிப்பால் அடிக்கடி அமைச்சர்கள் மற்றும் முதல்வர் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது.

இது போன்ற கூட்டங்கள் தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும் உரிய முன்னெச்சரிக்கையை பின்பற்றவில்லை என புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் இதுகுறித்து சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார். இதுகுறித்து அவர் தாக்கல் செய்த மனுவில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தனிமனித இடைவெளி பின்பற்றவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனுவானது இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், முதல்வர் அமைச்சர்கள் பங்கேற்கும் அரசு நிகழ்ச்சிகள் தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க இயலாது என நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து அமைச்சர்கள், முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.



Tags : Ministers ,Chief Minister ,Corona ,Chennai High Court ,events , Ministers, Chief Minister, Programs, Corona Precaution, Chennai High Court
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...