கொரோனா ஊரடங்கால் வருவாய் இழந்த ஒளி, ஒலி அமைப்பாளர்கள்: உரிய நிவாரணம் கேட்டு தாம்பரத்தில் மவுனப் போராட்டம்...!!!

சென்னை:  சென்னையை அடுத்த தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமுடக்கத்தால் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள ஒளி, ஒலி அமைப்பாளர்கள் நிவாரணம் வழங்கக்கோரி மவுன போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒளி, ஒலி அமைப்பாளர்கள், மேடை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள்,  பந்தல் அமைப்பாளர்கள் உள்ளிட்ட அனைவரும் கொரோனா ஊரடங்கால் வேலை இன்றி தவித்து வருவதாக வேதனை தெரிவித்துள்ளனர். இதனால் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை தாம்பரம் கோட்டாட்சியரிடம் வழங்க 150க்கும் மேற்பட்டவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 மேலும் ஒலிபெருக்கி, மின் விளக்குகள் மற்றும் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியும் அவர்கள் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு தலா 5 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதனையடுத்து முற்றுகை போராட்டத்திற்கு பின்னர் ஒளி, ஒலி அமைப்பாளர்கள் தங்களது கோரிக்கைகளை தாம்பரம் வட்டாட்சியரிடம் மனுவாக அளித்தனர். உரிய பாதுகாப்பு அம்சங்களுடன் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் கோவில் திருவிழாக்களை நடத்துவதற்கு ஊரடங்கு விதிகளில் மேலும் தளர்வுகளை அறிவிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Related Stories: