492 ஆண்டு கால வனவாசம் முடிவுக்கு வந்தது.. அரசர் திரும்புகிறார்.. #JaiShreeRam என்ற ஹாஷ்டேகை உலக அளவில் ட்ரெண்ட் செய்த ராம பக்தர்கள்!!

சென்னை: அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை பணிகள் இன்று அயோத்தியில் கோலாகலமாக நடைபெற்றது. ராமர் கோயில் அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, யாக நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர், 40 கிலோ வெள்ளி செங்கலை எடுத்துக்கொடுத்து அடிக்கல் நாட்டு விழாவை தொடங்கி வைத்தார். பெரும் எதிர்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜை விழாவை ராம பக்தர்கள் அனைவரும் ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.

எடுத்துக்காட்டாக

*5 நூற்றாண்டுகள் காத்திருப்பு முடிவுக்கு வந்தது. எண்ணற்ற தியாகங்கள், எண்ணற்ற முயற்சிகளுக்கு வெற்றி கிடைத்துள்ளது என்று ஒரு ராம பக்தர் #JaiShriRam ஹாஷ்டாக்கில் பதிவிட்டுள்ளார் .

*அதே போன்று மோடியின் தோளில் ராமர் சாய்ந்திருப்பது போட படத்தை போட்டு ஒருவர் ஜெய் ஸ்ரீராம் என்று பதிவிட்டுள்ளார்.

*மேலும் அயோத்தியில் இன்றைக்கு ராமர் கோவில் வர காரணமானவர்கள் என்று கூறி வாஜ்பாய், அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, கல்யாண்சிங், பால்தாக்கரே ஆகியோரின் புகைப்படங்களை பதிவிட்டுள்ளனர்.

*இன்றைய தினம் வரலாற்று சிறப்பு மிக்க நாள். நாம் ராமருக்கு கோவில் கட்டுவதன் மூலம் 492 ஆண்டு கால வனவாசம் முடிவுக்கு வந்தது என்று ராம பக்தர் பதிவிட்டுள்ளார்.

*வனவாசம் சென்ற அரசர் திரும்பி வருகிறார் என்று கூறி பட்டத்து யானை மீது ராமர் திரும்பி வரும் படத்தை போட்டு பதிவிட்டுள்ளனர்.

*அயோத்தி பூமி பூஜை, ராம ஜென்மபூமி, ராம ராஜ்ஜியம் ஆரம்பம், ராமர் மீண்டும் தர்ம நகரத்திற்கு திரும்பினார் என்று பலவிதமான ஹேஸ்டேக்குகளை பதிவிட்டு ராமர் கோவில் பூமி பூஜை விழாவை ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தனர்.

Related Stories: