மயிலாடுதுறை சீர்காழி அருகே 13 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை...!! ஒருவர் கைது!!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே 13 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது உள்ள காலகட்டத்தில் பாலியல் தொல்லைகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. அதிலும் பச்சிளம் குழந்தைகள் முதல் பாதிக்கப்படுகின்றனர். இதனால் பலரும் இறக்கும் நிலை ஏற்படுகிறது. இந்த நிலையில் தற்போது மயிலாடுதுறை மாவட்டத்தில் 13 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்டம் திருவெங்காட்டில் அருண் என்பவர் வசித்து வருகிறார்.

இந்த நிலையில் பக்கத்து ஊரில் இவரது மாமா வசித்து வருகிறார். அவருக்கு 13 வயதில் ஒரு பெண்குழந்தை உள்ளது. இதனையடுத்து மாமா வீட்டிற்கு அருண் அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அருண் மாமன் மகளிடம் நெருங்கி பழகி, ஆசை வார்த்தைகளை கூறி பாலியல்ரீதியாக பல்வேறு தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளார். இதன் விளைவாக அந்த சிறுமி கர்ப்பமடைந்ததாக கூறப்படுகிறது. இதனையறிந்த சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் அருணை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>