×

திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கம் : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை : திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து ஏன் நீக்கக் கூடாது என விளக்கம் கேட்டு கு.க.செல்வத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. கழக கட்டுப்பாட்டை மீறி அவப்பெயர் ஏற்படும் வகையில்செயல்பட்டதால், கு.க.செல்வம் நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் கு.க.செல்வம் அவர்கள், அவர் வகித்து வந்த பொறுப்புகளிலிருந்து இன்று முதல் (05-08-2020) விடுவிக்கப்படுகிறார். தி.மு.க. தலைமை நிலைய அலுவலகச் செயலாளர் மற்றும் தலைமைச் செயற்குழு உறுப்பினர் பொறுப்புகளிலிருந்து விடுவிக்கப்பட்ட கு.க.செல்வம் அவர்கள், கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வருவதையொட்டி, அவரை தற்காலிகமாக கழகத்திலிருந்து நீக்கி வைப்பதுடன், ‘கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து ஏன் நீக்க கூடாது’ என அவருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

Tags : KK Selvam ,MK Stalin ,DMK ,Announcement , DMK, Executive Committee, Member, KK Wealth, Party, Responsibilities, Dismissal, MK Stalin, Announcement
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...