×

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் ஏற்பட்ட வெடி விபத்து தீவிரவாத தாக்குதலை போல் உள்ளது: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

வாஷிங்டன்: பெய்ரூட் வெடி விபத்து தீவிரவாத தாக்குதலை போல உள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் அப்பகுதி முழுவதும் தீப்பிழம்புகளும் கரும்புகைகளுமாக வெளியேறியது. பெய்ரூட் மட்டுமல்லாமல் அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது. இந்த வெடிவிபத்தில் தற்போதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய  2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பெய்ரூட் வெடி விபத்து தீவிரவாத தாக்குதலை போல உள்ளததாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இதுகுறித்து வெள்ளி மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அது ஒரு குண்டு வெடிப்பாக இருக்கலாம் என தமது ராணுவ ஜெனரல்கள் தம்மிடம் தெரிவித்ததாக கூறினார். ஏதோ உற்பத்தி கூடத்தில் ஏற்பட்ட விபத்து போல தெரியவில்லை என்ற அவர், அனுபவம் வாய்ந்த தமது ராணுவ ஜெனரல்கள் அதை ஒரு தாக்குதல் என்றே கூறியதாகவும்தெரிவித்தார். லெபனான் மக்களுக்கு உதவ தாம் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். முன்னதாக, லெபானான் நாட்டின் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்திருந்தார்.  வெடி விபத்தால் ஏற்பட்ட உயிர், பொருள் சேதம் வருத்தமும் அதிர்ச்சியும் அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : Donald Trump ,capital ,bombing ,US ,Lebanese ,Beirut , Lebanon, Beirut, bombing, terrorist attack, US President Trump
× RELATED அமைதிக்கான நோபல் பரிசு: அமெரிக்க...