வாஷிங் மெஷின் பாதுகாப்பு டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

* வாஷிங் மெஷினில் இரண்டு மாடல்கள் உண்டு. அவை  பிரெண்ட் லோடிங், டாப் லோடிங் ஆகும். இந்த இரண்டு   மாடல்களில்  துணிகளை வெளுப்பதில் பிரெண்ட் லோடிங் மாடல் சிறந்தது. ஆனால் டாப் லோடிங் மாடலில் தண்ணீர்,   மின்சாரம் இரண்டும் சிக்கனம்.

*நேரடியாக வெயில் படும் பால்கனி, வராண்டா பகுதிகளில் வாஷிங்மெஷினை வைக்கக் கூடாது. அதனால் மெஷினின்   பெயிண்ட் வெளிறிப்போய் பழசுபோல் காட்சி அளிக்கும்.

*குளியலறைக்குள் வைக்கக் கூடாது. துரு பிடிக்காமல் இருக்க பிரத்யேக கோட்டிங் தரப்பட்டிருந்தாலும் துரு   பிடித்துவிடும்.

*ஆட்டோமேட்டிக் மாடல், செமி ஆட்டோமேட்டிக் மாடல் என இரண்டு வகை உண்டு. முதல் வகை மெஷினுக்கு   தண்ணீர் தேவைப்படும். இரண்டாவது வகைக்கு தண்ணீர், மின்சாரம் சிக்கனமானது.

*தண்ணீர் சிக்கனத்தை மனதில் கொண்டு போதிய தண்ணீர் இல்லாமல் துணிகளை அலசினால் துணிகளிலிருந்து   சோப்பு முழுமையாக அகலாமல் தங்கி சருமப் பிரச்னைகளை ஏற்படுத்தி விடும்.

*மெஷினில் குறிப்பிட்டுள்ள கொள்ளளவுக்கு மேல் துணிகளை போட்டால் மெஷின் விரைவில் பழுதாகி விடும்.பொதுவாக வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ் போன்றவைகளை அடுப்புக்கு அருகிலே வைக்கக் கூடாது.

- அ.திவ்யா, காஞ்சிபுரம்.

Related Stories: