×

சென்னையில் உயிர்கொல்லி கொரோனாவால் மேலும் 18 பேர் உயிரிழப்பு!!!

சென்னை: கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் சென்னையில் 18 பேர் உயிரிழந்திருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நேற்றிரவு முதல் இன்று காலை வரை கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்த 18 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 3 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதாவது திருவிக நகரை சேர்ந்த 75 முதியவர், திருவள்ளூர் பாலமேடு பகுதியை சேர்ந்த 45 வயதுடைய ஆண் மற்றும் சென்னையை சேர்ந்த 40 வயதுடைய ஆண் என மொத்தம் 3 பேர் ஸ்டான்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர். இதேபோல சென்னை ராஜூவ்காந்தி அரசு மருத்துவமனையில் 8 பேரும், கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 2 பேரும்  கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

 இதனையடுத்து அரசு மருத்துவமனையில் மட்டும் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஆயிரம்விளக்கு தனியார் மருத்துவமனையில் 61 வயதுடைய முதியவர் ஒருவரும், அதேபோல போரூர் தனியார் மருத்துவமனையில் 60 வயது முதியவர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். எனவே தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த உயிரிழப்பு சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai , 18 more killed by corona in Chennai
× RELATED சென்னையில் மேலும் 992 பேருக்கு கொரோனா தொற்று உறுதி