×

விலகி இருந்து கொரோனாவை விரட்டுவோம் : இந்தியாவில் கொரோனா நோயில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 12.82 லட்சத்தை தாண்டியது!!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு 19.08 லட்சத்தை கடந்த நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 12.82 லட்சத்தை தாண்டியது. நாட்டில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 51,706 பேர் கொரோனா நோய் தொற்றின் காரணமாக புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கையானது 19,08,254 ஆக உயர்ந்துள்ளது. இதில் 5,86,244  பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில்,12,82,215 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒரே நாளில் மேலும் 857 உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது. உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையானது 39,795 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலங்கள் வாரியான விவரம்!!

மகாராஷ்டிராவில் நேற்று 7,760 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 4,57,956 ஆகி உள்ளது.  நேற்று 300 பேர் உயிர் இழந்து மொத்தம் 16,142 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 12,326 பேர் குணமடைந்து மொத்தம் 2,99,356  பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 5,063 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 2,68,285 ஆகி உள்ளது.இதில் நேற்று 108 பேர் உயிர் இழந்து மொத்தம் 4,349 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,501 பேர் குணமடைந்து மொத்தம் 2,08,784 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

ஆந்திர மாநிலத்தில் நேற்று 9,747 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,76,333 ஆகி உள்ளது.  இதில் நேற்று 67 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,604 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,953 பேர் குணமடைந்து மொத்தம் 95,625 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 6,259 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,45,830 ஆகி உள்ளது.  இதில் நேற்று 110 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 2,704 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 6,772 பேர் குணமடைந்து மொத்தம் 69,272 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டெல்லியில் நேற்று 674 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 1,39,156 ஆகி உள்ளது. இதில் நேற்று 12  பேர் உயிர் இழந்து மொத்தம் 4,033 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 972 பேர் குணமடைந்து மொத்தம் 1,25,726 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

Tags : India , India, Healed, Number, Corona
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!