×

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெடி விபத்தால் ஏற்பட்ட உயிர், பொருள் சேதம் வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது : பிரதமர் மோடி இரங்கல்!!

பெய்ரூட்:  லெபானான் நாட்டின் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த வெடிவிபத்தால் அப்பகுதி முழுவதும் தீப்பிழம்புகளும் கரும்புகைகளுமாக வெளியேறியது. இந்த வெடிவிபத்தில் தற்போதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

பெய்ரூட் மட்டுமல்லாமல் அந்நகரில் இருந்து 200 கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ள தீவுகளிலும் இந்த வெடிவிபத்தின் தாக்கம் உணரப்பட்டது.  இந்த வெடிவிபத்தில் தற்போதுவரை 73 பேர் உயிரிழந்துள்ளனர். 3 ஆயிரத்து 700 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் வைக்கப்பட்டிருந்த மிகவும் ஆபத்து நிறைந்த வெடிக்கக்கூடிய  2 ஆயிரத்து 750 டன் அமோனியம் நைட்ரேட் வேதிப்பொருளால் தான் இந்த கோரவிபத்து நடைபெற்றுள்ளதாக லெபனான் பிரதமர் ஹசன் டியப் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் லெபானான் நாட்டின் பெய்ரூட்டில் நிகழ்ந்த வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் வெடி விபத்தால் ஏற்பட்ட உயிர், பொருள் சேதம் வருத்தமும் அதிர்ச்சியும் அளிக்கிறது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.


Tags : Modi ,explosion ,capital ,Beirut ,Lebanon , Lebanon, Beirut, explosion, casualties, property damage, Prime Minister Modi, condolences
× RELATED காட்டுமன்னார்கோவில் அருகே நிகழ்ந்த...