×

யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் மீண்டும் தொடக்கம்

லிஸ்பன்: ஐரோப்பிய நாடுகளில் உள்ள கால்பந்து கிளப்புகளுக்கு இடையிலான யுஈஎப்ஏ சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்க உள்ளது. ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் கால்பந்து போட்டிகளில் முன்னணி இடங்களை பெறும் கிளப் அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்கும். இங்கிலாந்தில் இங்லிஷ் பிரீமியர் லீக், ஜெர்மனியில் பண்டெஸ்லிகா, இத்தாலியில் சீரி ஏ, சுவிட்சர்லாந்தில் சுவிஸ் சூப்பர் லீக். ஸ்பெயினின் லா லிகா போன்ற தொடர்களில் முன்னிலை பெறும் கால்பந்து அணிகள் மோதும் இந்தப் போட்டியை ஐரோப்பிய கால்பந்து சங்கங்களின் கழகம் (யுஈஎப்ஏ)  நடத்துகிறது. பிரான்ஸ், இங்கிலாந்து, ஸ்பெயின், ஜெர்மனி, இத்தாலி நாடுகளை சேர்ந்த 32 அணிகள் 8 பிரிவுகளாக பிரிந்து விளையாடி வந்தன. கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய சாம்பியன்ஸ் லீக், கொரோனாவால் மார்ச் 2020ல் இடைநிறுத்தப்பட்டது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்று வந்த முன்னணி கால்பந்து லீக் போட்டிகள் கொரோனா பரவலுக்கு இடையே மீண்டும் தொடங்கப்பட்டு தற்போது முடிவடைந்துள்ளன. அதனை எடுத்து ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டி இம்மாதம் 7ம் தேதி (இந்திய நேரப்படி 8ம் தேதி) முதல் மீண்டும் தொடங்க உள்ளது. காலிறுதி போட்டிகள் ஆகஸ்ட் 13-16 வரை நடைபெறும். அரையிறுதி 19ம் தேதியும், இறுதிப் போட்டி ஆகஸ்ட் 24ம் தேதியும் ரசிகர்கள் இல்லாமல் மூடிய அரங்கில் நடைபெறும். போட்டிகள் அனைத்தும் போர்ச்சுகல் தலைநகர் லிஸ்பனில் நடைபெற உள்ளன.

Tags : UEFA Champions League , UEFA Champions League, again, star
× RELATED சாம்பியன் லீக்: லிவர்பூல் வெற்றி