×

சொல்லிட்டாங்க...

* மத்திய பாஜ அரசு மாநில அரசுகளை கலந்தாலோசிக்காமல் புதிய கல்விக்கொள்கை மூலமாக மும்மொழி திட்டத்தின் மூலம் இந்தி, சமஸ்கிருதத்தை திணிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையில் பல நல்ல அம்சங்கள் உள்ளன. அதேசமயம் சில அம்சங்கள் பற்றி ஐயப்பாடுகளும் எழுப்பப்படுகின்றன. - தமாகா தலைவர் ஜி.கே.வாசன்

* கொரோனா ஊரடங்கால், சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களின் ஒட்டுமொத்த வாழ்வும் தலைகீழாக மாறி, முன்னெப்போதும் கண்டிராத கடுமையான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

* புதிய கல்விக்கொள்கை நாடு முழுவதும் அமல்படுத்தப்பட கொண்டு வரப்பட்டுள்ளது. இது, தமிழ்நாட்டிற்கு மட்டுமானதல்ல. - தமிழக பாஜ தலைவர் எல்.முருகன்

Tags : Told
× RELATED சொல்லிட்டாங்க...