×

எந்த சூழ்நிலையிலும் என்னால் 100% வெற்றியை ஈட்ட முடியும்: ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற பார்வையற்ற மாணவர் பேட்டி

சென்னை: எந்த சூழ்நிலையிலும் என்னால் 100% வெற்றியை ஈட்ட முடியும் என்றும் ஐஏஎஸ் தேர்வில் வெற்ற்றி பெற்ற பார்வையற்ற மாணவர் கூறியுள்ளார். ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுக்கான ரிசல்ட் நேற்று ெவளியானது. இதில் சென்னை ஓட்டேரி புதிய வாழை மா நகர் 2-வது தெருவை சேர்ந்த பால நாகேந்திரன்(வயது 31) தேர்ச்சி பெற்றுள்ளார். இவர் அகில இந்திய அளவில் 659வது இடத்தை பிடித்துள்ளார். பால நாகேந்திரன் 100% பார்வை குறைபாடு உள்ளவர். இவரது தந்தை தேவதாஸ். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். தாய் சுந்தரி. பால நாகேந்திரனுக்கு பிரேம்குமார், மணிகண்டன் என்ற 2 தம்பிகள் உள்ளனர். ேதர்வில் வெற்றி பெற்றது குறித்து பால நாகேந்திரன் அளித்த பேட்டி: 6 வயது முதலே தான் பயின்ற சிறுமலர் பள்ளியில் என்னை ஊக்குவித்தனர். எனது படிப்பிற்கு எனது குடும்பத்தினர் முழுவதும் எனக்கு உதவி செய்தார்கள். ஒன்பது ஆண்டுகள் இதற்காக செலவு செய்தேன். ஐஏஎஸ் தேர்வில் நேர்காணலின் போது தற்போது சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் எனக்கு பெரிதும் உதவிகரமாக இருந்தார்.

ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றுவிட்டேன் என்பதால் இத்துடன் எல்லாம் முடிந்து விடவில்லை. இதன் பிறகு தான் போராட  வேண்டியுள்ளது. எனது குறைபாட்டை வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு தான் இது ஒரு குறைபாடாக தெரியும்.  ஆனால் எனக்கு இது பழகிப் போன விஷயம். அதனால் எந்த சூழ்நிலையிலும் எந்த காலகட்டத்திலும் தற்போது உள்ள தொழில்நுட்ப வளர்ச்சியைப் பயன்படுத்தி என்னால் 100% வெற்றியை ஈட்ட முடியும். இவ்வாறு பாலநாகேந்திரன் கூறினார்.
பூர்ணசுந்தரி: மதுரை, மணிநகரம் கொடிக்காரத்தெருவை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் முருகேசன், ஆவுடையதேவியின் மகள் பூர்ணசுந்தரி (25). கண் பார்வையற்றவர். இவர் பிஏ ஆங்கிலம் படித்துள்ளார்.

2016ல் இவர் முதல்முறையாக ஐஏஎஸ் தேர்வுக்கான முதன்மைத்தேர்வு எழுதி, அதனைத்தொடர்ந்து, மெயின் மற்றும் 2017ல் நேர்முக தேர்வுக்கு  சென்றார். 13 மதிப்பெண் வித்தியாசத்தில் தேர்ச்சி பெறவில்லை. பின்னர் 2018ல் தமிழ்நாடு கிராம வங்கியில் தேர்ச்சி பெற்று, வங்கியில் பணியாற்றி வருகிறார். 2019ல் மீண்டும் ஐஏஎஸ் தேர்வு எழுதினார். கடந்த பிப். 19ம் தேதி டெல்லியில் நடந்த நேர்முகத்தேர்வில் கலந்து கொண்டார். ஏற்கனவே பெற்ற அனுபவம் இவருக்கு கைகொடுத்தது. தேசிய அளவில் 286வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். “ஐஏஎஸ் பயிற்சி முடித்து, மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். பெற்றோரே எனக்கு இரு கண்கள்’’ என்றார் அவர்.


Tags : student ,IAS , I can achieve 100% success in any situation: Interview with a blind student who has passed the IAS exam
× RELATED சென்னையில் தனிமைப்படுத்தி...