×

கூடுதலாக ஒரு மொழியை கற்க மாணவர்களை அரசு ஊக்கப்படுத்த வேண்டும்: பாஜ தலைவர் எல்.முருகன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதிய கல்விக் கொள்கையானது நாடு முழுவதும் அமல்படுத்தப்பட கொண்டு வரப்பட்டுள்ளது. இது தமிழ்நாட்டிற்கு மட்டுமானதல்ல. இந்தி, சமஸ்கிருதம் கட்டாயம் என்பது எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. மாணவர்கள் கல்வி கற்பதில் மகிழ்வான, உற்சாகமான சூழல் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் கூடுதல் மொழி கற்பதில் ஆர்வம் காட்டுவார்கள். தமிழ்நாட்டில், சிபிஎஸ்இ, மெட்ரிகுலேசன் பள்ளிகள் ஆயிரக்கணக்கில் உள்ளன. இங்கு பல்வேறு மொழிகள் கற்பிக்கப்படுகின்றன.

அப்படியென்றால் கூடுதலாக ஒரு மொழியை கற்கும் வாய்ப்பு அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மட்டும்தான் இழக்கிறார்கள். இந்தியோ மற்றொரு இந்திய மொழியோ கற்க விரும்பும் மாணவர்களின் ஆர்வத்திற்கும், பெற்றோர்களின் விருப்பத்திற்கும் நாம் தான் இடையூறாக இருக்கிறோம். தமிழ்நாட்டின் அரசியல் நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒவ்வொருவரும் கருத்து தெரிவிக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை மொழி பற்றி மட்டுமே பேசி, தடுத்துவிட வேண்டாம்.

Tags : L Murugan ,government ,BJP , In addition, to learn a language, to encourage the student, the government, BJP leader L. Murugan, insisted
× RELATED ஊட்டியில் ஒரே நேரத்தில்...