×

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் கடன் திட்டங்கள்: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள அறிக்கை: காஞ்சிபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு கழகத்தின்கீழ் பிற்படுத்தப்பட்டோர்,  மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்கள் பொருளாதார மேம்பாடு அடைய 2020-2021ம் ஆண்டுக்கான கடன் திட்டங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் பயன்பெற பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பினராக இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கு மிகாமலும், 18 முதல் 60 வயது வரை இருத்தல் வேண்டும். ஒரு குடும்பத்துக்கு ஒருவருக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். (ஆதார் எண் அவசியம்).விவரங்களுக்கு மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்திலும், இணைப்பதிவாளர், கூட்டுறவு சங்கங்களில் நேரில் பெற்று கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : Tamil Nadu Backward Classes Economic Development Corporation: Collector's Notice ,Collector ,Tamil Nadu Backward Classes Economic Development Corporation , Tamil Nadu, Backward Classes, Economic Development Corporation, Credit Schemes, Collector
× RELATED மதுரை மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகள்...